அடிக்கடி மின்தடை

Update: 2025-09-07 12:16 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பயன்படுத்த முடியாமல் இல்லத்தரசிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ஏற்படும் தொடர் மின்தடையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்