காங்கயம்- பழையகோட்டை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் அமைந்துள்ள சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையோரத்தில் உள்ள புதர்களில் இருந்து செடி-கொடிகள் மின்கம்பிகளின் மீது படர்ந்து கம்பத்தின் உச்சி வரை சென்றுள்ளது.
கம்பிகளில் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்வப்போது தீப்பொறி பறக்கிறது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மின்கம்பங்களும் சேதமடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து காங்கயம் மின்வாரியத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றி மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
கதிரவன், காங்கயம்.