பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சி அவ்வை நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் பழமை வாய்ந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. அடிப்பகுதியில் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலை உள்ளது. இதனால் அங்கு வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.