சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் பூசி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.