சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2026-01-25 18:45 GMT

அரக்கோணம் சுவால்பேட்டையில் திருத்தணி சாலையில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின் கம்பத்தில் உள்ள சுவிட்ச் போர்டு திறந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள ஒயர்கள் கீழே சாலையில் செல்பவர்களின் கையில் படும்படியாக உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜகோபால், அரக்கோணம்.

மேலும் செய்திகள்