மதுரை மாவட்டம் பரவை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதியில வசிக்கும் இல்லத்தரசிகள் பகலில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. இரவு நேரங்களில் தூக்கமின்றி குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.