தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி செல்லும் விநாயகர் கோவில் வரையிலும் மின்விளக்குகள் அமைப்பதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. எனினும் மின் இணைப்பு வழங்காததால் மின்விளக்குகள் ஒளிராமல் காட்சிப்பொருளாக உள்ளன. எனவே மின்இணைப்பு வழங்கி மின்விளக்குகள் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.