சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் கேண்டீன் பஸ் நிறுத்தம் உள்ளது. ஓமலூர்-தர்மபுரி செல்லும் வழியில் தீவட்டிப்பட்டி அடுத்துள்ள மிக முக்கிய பஸ் நிறுத்தம் இதுவாகும். இந்த இடத்தில் தற்போது பாலம் வேலை நடைபெறுவதால் அனைத்து மின் கம்பங்களும் அகற்றப்பட்டன. மேலும் எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள் செயல்படவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் மற்றும் எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள் அவசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தாரமங்கலம்.