விருத்தாசலம் அருகே எருமனூர்- சின்னவடவாடி செல்லும் வழியில் மின்கம்பங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து மின் கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.