நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அய்யம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மூலக்கடை காய்காடு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இது எப்போது வேண்டுமானாலும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மின்வாரியத்துறை ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், நாமகிரிப்பேட்டை.