கோவை வடவள்ளி டாடா நகர் 2-வது கிழக்கு வீதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவது இல்லை. இருட்டை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் அவசர, அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுத்து ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.