திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டியங்கிணறு பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். இதனால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபத்தான மின்கம்பத்தால் பயணிகள் பஸ் நிறுத்தம் அருகே நிற்க அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், பெருமாநல்லூர்.