மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-24 07:37 GMT

சுசீந்திரம் புதுகிராமத்தின் பின்புறம் மாணிக்க புத்தேரிகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரமாக உள்ள மின்கம்பங்கள் அங்கும் இங்கும் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும், மின்கம்பங்களை சுற்றி செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுவதால் தீவிபத்துகள் ஏற்படுவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், சாய்ந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்