விபத்து அபாயம்

Update: 2025-08-17 07:04 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்துக்கோணம் கால்வாய்கரை பகுதியில் ஒரு டிரான்ஸ்பாா்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்