சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுப்புற பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பழுது ஏற்பட்டுள்ளதால் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுது ஏற்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசி, தாரமங்கலம்.