உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2025-08-03 12:52 GMT

திருச்சி மாவட்டம் முசிறி மாவலிப்பட்டியில் இருந்து வெள்ளாளப்பட்டி செல்லும் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகில் உள்ள மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடுபோல காட்சியளிக்கிறது. தற்போது பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்