திருப்பூர்- மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகர் முதல் வீதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மின்தடை ஏற்பட்டால் அதை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறும் நிலை காணப்படுகிறது. டிரான்்ஸ்பார்மர் அருகே கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் பேராபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், திருப்பூர்.