சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மால்குடி கிராமம் சின்ன கருப்பர் கோவில் வீடு முன்புள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிய மின்கம்பம் அமைத்துதர வேண்டும்.