ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2025-07-27 18:29 GMT

சேலம் சங்கர் நகரில் மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீேழ விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தை பொதுமக்கள் கயிற்றால் கீழே விழாதபடி கட்டி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி ஆபத்தான வகையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, சங்கர் நகர், சேலம்.

மேலும் செய்திகள்