சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, உரசூர் , ஆந்தகுடி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க மிகவும் சிரமபடுகின்றனர். மேலும் இரவில் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தூக்கமின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் மின்தடையை சரிசெய்து தர வேண்டும்.