தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-07-27 11:20 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நெடுகிலும் மின்கம்பம்கள் நடப்பட்டு அதில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பிகள் தொய்வடைந்து தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்