தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தன்குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எாியாமல் உள்ளது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பெண்கள் குழந்தைகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத தெருவிளக்கை அகற்றி விட்டு புதிய தெருவிளக்கை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.