தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

Update: 2025-07-20 11:20 GMT

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு மேல சாலியர் தெருவில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள மூங்கில் மரம் மேலே செல்லும் மின்கம்பத்தில் உரசுவதால் இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்றடிக்கும் நேரங்களில் மூங்கில் மரம் மின்கம்பத்தில் உரசி அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மூங்கில் மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்