கொட்டாரம் பேரூராட்சியில் அண்ணாவிகுளத்தின் கீழக்கரையில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டு விளக்கு அதிலிருந்து விடுபட்டு தொங்கிய படி காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் கீழே விழுந்து பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.