திண்டிவனம்- செஞ்சி செல்லும் வல்லம் ஏரிக்கரை சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.