சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2025-07-13 15:14 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள வெல்டிங் பட்டறை எதிரே செல்லும் மண்சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு மின்கம்பத்தில் மின் கம்பிகள் பொருத்தப்பட்டது. அந்த மின்கம்பி வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இந்த கம்பங்களிலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அதன் காரணமாக மின்கம்பம் சற்று சாய்ந்து உள்ளது. தற்போது கடுமையான காற்று வீசுவதால் மின் கம்பம் மேலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைத்து விபத்தையும், உயிரிழப்பையும் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்