சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2025-07-13 13:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வடக்குரதவீதி பகுதியில் உள்ள சிவன் கோவில் ஊரணி கரையில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்நிலையில் மின்விளக்கின் வெளிச்சம் தெரியாமல் அருகில் இருக்கும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடப்பதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்