பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் உள்ள சாலையேரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும், செங்குணம் புது கருப்பு சுவாமி கோவில் நுழைவு வாயில் தென்பகுதி சாலையோர அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும் அருகே முளைத்துள்ள செடி கொடிகள் மின் கம்பத்தில் படர்ந்து உள்ளது. எனவே மழை பெய்யும்போது இந்த பகுதியில் நிலத்தில் மின்சாரம் பாயும் நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை மேற்கொண்ட துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.