வீடுகள் சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-06 19:16 GMT

அரூர் டவுன் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் கடந்த 1968-ம் ஆண்டு 26 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு 57 ஆண்டுகள் ஆவதால் வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. மேலும் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதால் தூய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-புவனேஷ்வரி, அரூர்.

மேலும் செய்திகள்