ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு பள்ளி மைதானம் அருகே உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதி வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது. அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.