புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் இரவு முழுவதும் ஒளியூட்டக்கூடிய எல்.இ.டி. பல்புகள் பகல் நேரத்திலும் எரிந்து மின்சார விரயம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு கூறி வரும் நிலையில் எண்ணற்ற இடங்களில் இவ்வாறு மின்சார விரயமாகி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்சார் பல்புகளை பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.