நாச்சியார் கோவிலில் இருந்து தண்டந்தோட்டம் வழியாக முருக்கங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில முறையான பராமரிப்பின்றி சாய்ந்த நிலையில் இருக்கிறது. மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.