விபத்து அபாயம்

Update: 2025-07-06 06:48 GMT

கொட்டாரம் பேரூராட்சியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தின் கீழக்கரையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு அதிலிருந்து விடுபட்டு தொங்கிய நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் தெருவிளக்கு கீழே விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொங்கிய நிலையில் காணப்படும் தெருவிளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை இணைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்