சேலம் 4 ரோடு பெரமனூா் வீட்டு வசதி வாரியத்தில் மின் கம்பம் உள்ளது. இதன் அருகே ஆழ்துளை குடிநீர் தொட்டி மின்மோட்டார் இணைப்புடன் இருந்தது. கடந்த மாதம் பெய்த மழையில் இ்ந்த மின்கம்பம் சாய்ந்்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நட்டனர். ஆனால் இதுவரை அந்த கம்பத்திற்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த ஆழ்துளை குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. அதனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. காட்சி பொருளாக உள்ள கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்கவும், குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
-பொதுமக்கள், பெரமனூர், சேலம்.