மின் விபத்து அபாயம்

Update: 2025-06-15 11:48 GMT

கோவை அருகே ஆலாந்துறை ராமநாதபுரம் ஆஸ்பத்திரி தெருவில் மின்கம்பம் ஒன்று உடைந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மின்கம்பம் வலுவிழந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பம் உடைந்து விழலாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மின் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்