கடலூர் பீச் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே உள்ள மின்கம்பத்தை செடி, கொடிகள் சூழ்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மின்விபத்து ஏதேனும் ஏற்படும் முன் அந்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.