மின்விளக்கு வசதி தேவை

Update: 2025-05-18 18:08 GMT
கடலூர் ஆல்பேட்டையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் செல்லும் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்கள் நடைபெறும் சூழல் உள்ளது. எனவே அப்பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்