பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சமின்றி செல்ல உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருந்ததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் இருந்த மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய மின்விளக்குகளை பொறுத்தி எரிய வைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.