சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-05-18 10:03 GMT

பட்டுக்கோட்டை டவுன் உத்தண்டி குளக்கரையில் மின்வாரிய அலுவலகம் எதிரே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலை உருவாகி உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்