கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, நன்செய் புகழூர் தவுட்டுபாளையத்தில் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கணினி மூலம் செயல்படுத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இங்கு இயங்கி வரும் அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மின்சாரம் இல்லாமல் கணினி பயன்படுத்த முடியாமலும், மின்விசிறி இல்லாமலும், செல்போன் மூலம் மக்களுக்காக சேவை செய்து வருகிறார்கள். செல்போன் மூலம் செயல்படுத்தி வருவதால் செல்போனில் உள்ள ஜார்ஜ் தீர்ந்து விடுவதால் மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.