மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்

Update: 2025-05-18 09:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா ராஜகிரி கிராமத்தில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின் கம்பிகளில் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் உரசி வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன், இந்த மரத்தின் அருகே செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளின் மீது உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்