கடலூர் அருகே வடுகப்பாளையம் பிரதான சாலையில் உள்ள தெருமின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நிகழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?