மின்தடையால் மக்கள் பாதிப்பு

Update: 2025-05-11 17:19 GMT
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை, பூலாம்பட்டி, தீர்த்தாகவுண்டன்வலசு கிராம பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் வாகரை, பூலாம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதாவது மாலை நேரம் வந்தால் போதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதுபற்றி விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்