உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-05-11 16:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டு, எம்.உசிலம்பட்டி, வடக்கிப்பட்டி, வெள்ளையக்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி, ஆவம்பட்டி, முள்ளிப்பட்டி, எம்.புதூர், இடையம்பட்டி, சம்பட்டி ஆகிய சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், வங்கி, காய்கறி சந்தை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிகமாக வரக்கூடிய இடமாக மேலத்தானியம் உள்ளது. மேலும் மேலத்தானியம் பஸ் நிறுத்தம் அருகே வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி சந்தை இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேலத்தானியம் பஸ் நிறுத்தம் எதிரே உயர் கோபுர மின்விளக்கு அமைத்துக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்