சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2025-05-11 12:55 GMT
கோவில்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்