தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் ராஜபாளையம் தெருவில் அங்காளம்மன் கோவில் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றியின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து மின்மாற்றிக்கு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.