சிதம்பரம் காந்தி சிலை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் உள்ள ஒருசில மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.