மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் தூக்கம் இல்லாமல் பச்சிளம் குழந்தைகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.