எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-05-04 11:48 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள வெள்ளாளர் தெரு, ரெட்டிபாளையம், கங்கவடங்க நல்லூர் மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு விளக்குகள் சரி வர எரிய வில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பழுதான அனைத்து தெரு விளக்குகளையும் மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்