உயர் கோபுர மின்விளக்கு சரிசெய்யப்படுமா?

Update: 2025-04-27 17:47 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதோடு, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்